img
img

பொம்பிள சிவாஜி ஆச்சி மனோரமா (26.5.1937-10.10.2015)
வெள்ளி 26 மே 2017 15:33:07

img

டி.ஏ.மதுரம். சி.டி. ராஜகாந்தம், சுந்தரிபாய். எம்.சரோஜா அங்க முத்து ஆகியோர் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய காலத்திலேயே முத்திரை பதித் துக் கொண்டவர் மனோரமா.எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மணிமகுடம் நாடகத்தில் நடித்த போது திராவிட இயக்கத்தை விட்டு விலகி திராவிட முன்னேற் றக் கழகம் தொடங்கிய அறிஞரும் கலைஞரும் மனோரமாவை தங்களது புதிய இயக்கத்திற்கு பிரச்சார பீரங்கியாக்கினார்கள். நாடகங்களையும் அவரது மேடைப் பேச்சையும் கேட்டு கவிஞர் கண்ணதாசன் தான் தயாரித்த 'மாலையிட்ட மங்கை' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிகையாக்கினார்.தனக்கு நாயகியாக நடிக்கத் தான் ஆசை என்று மனோரமா சொன்ன போது, "நாயகியாக நடித்தால் பத்துப் படத் திற்கு மேல் காணாமல் போய் விடுவாய், நகைச்சுவை செய் 50 வருடம் இருப்பாய்" என்று அப்போது கவிஞர் சொன்னது தீர்க்க தரிசனமான வாக்கியமாக அமைந்தது. நடிகர் முத்து ராமன் குலதெய்வம் ராஜகோபால், கே.ஆர்.ராமசாமி, பிரண்ட் ராமசாமி ஆகியோரின் நாடக சபாவில் நடித்தபோது இவரோடு நடித்த ராம நாதனை மணந்தார். அப்போது மனோரமாவோடு நடித்த சுலோட்சனாவை முத்துராமன் மணந்தார். (நடிகர் கார்த்திக்கின் பெற்றோர்).நாடக இயக்குநர் வெங்கட்ராமனும் ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜனும் கோபிசாந்தா எனும் இவரது இயற்பெயரை மனோரமா என்று மாற்றினார்கள். மாலை யிட்ட மங்கை தொடங்கி சிங்கம் 2 வரை யில் 1,520 படங்கள் வரை நடித்துள்ளபோதும் கவிஞர் வாலி, கே.பாலசந்தர், கோமல் சுவாமி நாதன், விசு, மௌலி, சோ இவர்களின் நாடகங்களிலும் அவ்வப்போது நடித்தும் வந்தார். மனோரமாவும் விருதுகளும் 2002இல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பித்தது.அதற்கு முன்னதாக பார்த்திபனின் புதிய பாதை படத்தில் சிறந்த துணை நடிகைக்கான விருதை மத்திய அரசு வழங்கியது. 1968இல் தில்லானா மோகனாம்பாள், 1998இல் எதிர் வீட்டு ஜன்னல், 1980இல் ஒரு வாரிசு உருவாகிறது. 1981இல் பாயும் புலி ஆகிய நான்கு படங்களுக் கும் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழக அரசு விருது பெற்றார் கலை மாமணி மனோரமா. கலைவாணர் விருது, எம்.ஜி.ஆர். விருது, ஜெய லலிதா விருது என 3 சிறப்பு விருதுகளை யும் தமிழக அரசு வழங்கியது. ஹைதராபாத்தில் தெலுங்கு நடி கர் சங்கம் ஆறு அடி ருத்ர வீணையை வழங்கி நட்சத்திர அரசு எனும் விருது வழங்கியது. தமிழில் சக்கை போடு போட்டு வந்த இவர், இந்தி, மலை யாளம், தெலுங்கு, கன்னடம், ஒரு இலங்கை படத்தில் சிங்கள நடிகையாகவும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களை சுமார் 11 நாடகங்கள் தயாரித்த மனோரமா, தனது மகன் பூபதியை நாயகனாக வைத்து தூரத்து சொந்தம் படத்தை தயாரித்தார். மியூசிக்ராமா எனும் இசைக் குழுவை நிறுவி தன் மகனுடன் இந்தியா முழுவதும், படங்களில் இவர் பாடிய பிரபல பாடல்களைப் பாடி வெற்றிக் கொடியும் நாட்டினார். Many Rivers to Cross எனும் ஆங்கிலப் படத்தை கொஞ்சும் குமரி எனும் பெயரில் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரித்தார். இதில் மனோர மாவின் நாயகனாக மனோகர் நடித் தார். பல படங்களில் இவருக்காக பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்ப காலங்களில் குரல் கொடுத்திருந் தாலும் இவரை தனது படத்தில் நடிக்க வைத்த கவி ஞரே அவரது இரத்தத் திலகம் (1965) படத்தில் பாடவும் வைத்தார். அது தொடங்கி ஸ்ரீ ராகவேந்திரா (1985) படம் வரை 85 படங்களில் சொந்தக் குரலில் பாடியும் உள்ளார். சிவாஜியுடன் 160 படங்கள் நடித்தவர் அவருக்கு ஜோடியாக ஞானப் பறவை படத்தில் நடித்தார். நாகேசுடன் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்த மனோரமா, திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகனாம்பாள் படங்க ளில் ஜோடி சேரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காகா ராதா கிருஷ்ணன் எம்.ஆர். ராதா, அவரது மகன் வாசு, ராதா ரவி, சோ, சுருளிராஜன், தேங்காய் சீனி வாசன், தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சந்திரபாபு, எஸ்.எஸ். சந்திரன், கவுண்டமணி என அனைத்து நகைச்சுவை நடிகர்களு டனும் நடித்துள்ள இவர், அருந்ததி எனும் தெலுங்கு படத் தில் மிகச் சிறப்பாக நடித்ததோடு அதன் தமிழ் பதிப்பை தமிழ்நாடு முழுக்க திரை யீட்டு உரிமையையும் பெற்றி ருந்தார். அறிஞர் அண்ணாவோடு நாய கியாக மேடை நாடகமான சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் நடித்ததோடு அவர் வசனம் எழுதிய 10 படங்கள் வரை நடித்துள்ளார். அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி. ராமாராவ் என ஐந்து முதலமைச்சர்க ளுடனும் நடித்த பெருமை மனோரமா விற்கு உண்டு. மனோரமாவின் ஒரே மகனான ராமனாத பூபதிக்கு தனலட்சுமி என்ற மனைவியும் ராஜராஜன், மீனாட்சி, அபிராமி என்ற 3 பிள்ளைகளும் இருக் கிறார் கள். இவர்களில் ராஜ ராஜன் அவரது மனைவி இருவரும் மருத்துவர் கள். அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. பேத்தி மீனாவுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. பூபதி 20 படங்கள் வரை நடித்திருக் கிறார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறப்பாக நடித்த ஆச்சி மனோரமாவிற்கு 'பொம்பள சிவாஜி' என அடை மொழி கொடுத்தவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். அவரது இயக்கத்தில் அநேகமான படங்களில் நடித்த மனோரமாவுக்கு தமிழகத்தின் முதல் சினி மாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழனில் நடித்த பெருமையும் உண்டு.தமிழ்நாட்டில் உள்ள எத்தனை வழக்கு மொழி, மாநில ரீதியான மொழி களை சரள மாகப் பேசக்கூடியவர். மனோரமா என்று கண்ணதாசன் புகழ்ந்தார். தமிழ்த் திரையுலகில் பொன் விழா கண்டு ஆட்சி நடத்தியவர் ஆச்சி மனோரமா. சிங்கை எழுத்தாளர் கழகம், மலேசிய கண்ணதாசன் அறவாரியம், பினாங்கு சிவாஜி மன்றம் ஆகியவை நடத்திய நிகழ்வுகளுக்கு மனோர மாவை அழைத்து வந்த பெருமை என க்கு உண்டு. 1976 தொடங்கி அவரது இறுதி காலம் 2015 வரை அவரது அன் புக்குப் பாத்திரமாக இருந்தது இறை யருள் எனக்கு கொடுத்த பெருமை. அவரது சரீரம் மறைந்திருக்கலாம். ஆனால் அவரது புகழ் தமிழ்த் திரைப்படம் என்று ஒன்று உள்ளவரை மறையாது. காலத்தை வென்று நிற்கும் அவரது நினைவோடு. -கரு.கார்த்திக்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img