இரண்டு நாள்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துப் பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று திடீரென பல்டி அடித்துள்ளார்.பல ஆண்டுகளாக ரசிகர்களைச் சந்திக்காமல் இருந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சந்தித்துப் புகைப்படும் எடுத்துக்கொண்டார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஐந்து நாள்கள் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்ததோடு, தமிழக அரசியல் சிஸ்டம் கெட்டுப்போய்க் கிடக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு, அரசியல் கட்சியினரை அதிரவைத்தது. கடந்த 22ஆம் தேதி, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, "ரஜினிகாந்த் ஒரு வியாபாரி. இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்துவிட்டனர். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போக வில்லை. கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் அறிவார். நடிகர்கள் களம் காணும் கட்சிகளால் பலனில்லை" என்று கடுமையாக விமர் சனம் செய்தார். ரஜினியை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்து ஐந்து நாள்கள் முடிந்தநிலையில், திடீரென பல்டி அடித்து, ரஜினியைப் புகழ்ந்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. நானும் ரஜினி ரசிகன்தான். 'ஸ்டாலின் சிறந்த நிர்வாகி. சிஸ்டம் சரியில்லை' என ரஜினிகாந்த் கூறியதை ஏற்க முடியாது" என்று கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்