டெல்லியில் உள்ள தமிழக முதல்வர் பழனிசாமியை பசு பாதுகாவலர்கள் அமைப்பினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்துக்கு தேவையான திட் டங்களை நிறைவேற்றித் தரவேண்டுமென்று கோரிக்கை மனுவை அளித்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் பழனிசாமி சென்றார். இந்நிலையில், முதல்வரை சந்திக்க பசு பாதுகாவலர்கள் அமைப்பினர் அனுமதி கேட்டனர். ஆனால், முதல்வரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் தங்கியிருந்த அறையை பசு பாதுகாவலர்கள் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள மாட்டிறைச்சிக் கூடங்களை மூட வலியுறுத்தி இந்த முற்றுகை நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்