img
img

மதுபான பார்களை தீவைத்து எரித்த பெண்கள்... இன்ஸ்பெக்டருக்கு பளார்... போலீஸ் தடியடியால் தமிழகம்
புதன் 24 மே 2017 17:21:00

img

தமிழகம்-புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக்கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கியதோடு, மதுபான பார்களை தீவைத்து எரித்தனர். போலீஸ் தடியடியால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தமிழகம்- புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றக் கோரி பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நெஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன. கடலூர்- புதுச்சேரி எல்லையில் உள்ள கன்னிகோயில் பகுதியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மதுபானக்கடைகளும் அகற்றப் பட்டுவிட்டன. இதனால், புதுச்சேரிக்கு குடிமன்னர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, கடலூர்- புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள சோரி யாங்குப்பம் பகுதியில் எட்டு தனியார் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. கோயிலைச் சுற்றி இந்த மதுபானக்கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்துள்ளது. இந்தநிலையில், சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுபானக்கடைகளை மூடக்கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படாததால், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். நாலாபக்கமும் அவர்கள் சிதறி ஓடினர். அப்போது, அங்கிருந்த மதுபான பார்களை அவர் கள் தீவைத்து எரித்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டம்குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கடலூர் கன்னிகோயில் பகுதியில் இருந்த மதுபானக்கடைகள், நீதிமன்ற உத்தரவால் அகற்றப் பட்டுவிட்டது. இதனால், இரு மாநில எல்லையில் உள்ள சோரியாங்குப்பத்தில் தனியார் மதுபானக்கடைகள் அதிகமாக திறக்கப்பட்டன. இந்த மதுக் கடையால் இளம்பெண்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர். நேற்று, மதுபானக்கடை உரிமையாளர்களிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது, நாங்கள் நாளை (இன்று) போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் மதுபானக்கடைளைத் திறக்கவேண்டாம் என்று கூறியிருந்தோம். அதையும் மீறி, மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. இதனால்தான், நாங்கள் அந்த மதுபானக்கடைகளை அடித்து நொறுக்கி னோம். இந்தப் பகுதியில் மேலும் 17 மதுபானக்கடைகள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்துவோம்" என்று கூறினர். காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹீம் கூறுகையில், "மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸார் தடியடி நடத்தினர். சமூக விரோதிகள் அதைப் பயன்படுத்தி, மதுபான பார்களை எரித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து நட வடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனிடையே, ஐந்து பேரை காவல்துறையினர் பிடித்துச்சென்று விசாரணை நடத்திவருகின்றனர். அதைக் கண்டித்தும் பொதுமக்கள் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பெண்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, இன்ஸ்பெக்டரை பெண் ஒருவர் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணை காவல்துறையினர் இழுத்துச்சென்றனர். அப்போது, மலர் என்ற பெண் அதைத் தடுக்க முயன்றார். இதில், அவர் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்களத்தில் இருந்த தில்லைநாயகி கூறுகையில், "சாலைமறியல் செய்தது நாங்கள்தான். எங்களைக் கைது செய்யாமல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆண்களையும், பள்ளி மாணவர்களையும் அடித்து உதைத்து இழுத்துக்கொண்டுபோனது ஏன். தைரியம் இருந்தால், எங்களைக் கைதுசெய்யுங்கள். அவர்களை விடும்வரை நாங்கள் கலைந்துபோக மாட்டோம்" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img