பிடிவாரன்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உட்பட எட்டு பேர் தரப்பில் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஶ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசினர். இதையடுத்து பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று நீதிபதி, 'எட்டு பேரும் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதாகக் கூறி, அவர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்நிலையில், நடிகர்களின் தரப்பில் நீலகிரி நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூர்யா, சரத்குமார் உட்பட் எட்டு பேர் சார்பாக வழக்கறிஞர் விஸ்வநாத், பிடிவாரன்டை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரிக்கப்படவுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்