பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராகததால் நடிகர்கள் சூர்யா சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறபித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக விசாரணைக்கு வராத நடிகர்களுக்கு நீதிபதி தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். 2009-ல் நடைபெற்ற சம்பவம் 2009-ம் ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இந்த செய்தி நடிகைககள் குறித்து மிகவும் தரக் குறைவான தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது எனக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பின்னர் அந்த செய்திக்கு நாளிதழ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. கண்டன கூட்டத்தில் பேசிய நடிகர்கள்.. இந்தச் செய்தி வெளியானதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நடிகர்கள் உரையாற்றினர். அந்தக் கூட் டத்தின்போது பத்திரிக்கையாளர்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை நடிகர்கள் சூர்யா,சரத்குமார்,சேரன், விவேக்,சத்யராஜ், அருண் விஜய குமார், விஜயகுமார்,நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் முன் வைத்ததாக கூறி ரசாரியா என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தள்ளுபடி செய்ய கோரிக்கை ரசாரியா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ப்பட்டது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு கோருமாறு நடிகர்களுக்கு அறிவுறுத்தியது அவர்கள் கோரிக்கையை தள்ளு படி செய்தது. இதனால் நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் நடிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சம்மன்கள் அனுப்பட்டும் நடி கர்கள் யாரும் இதுவரை ஆஜராகவில்லை. பிடிவாரண்ட் பிறபித்த நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நீதிமன்றத்திலிருந்து பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜரகாததால் நடிகர்கள் சூர்யா சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்