அரசியலுக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம் ரஜினி வருவதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூலாக பதில் அளித்தார் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன். மதுரை மாவட்ட திமுக சார்பாக மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதி விலக்கு கோரி கருத்தரங்கம் மதுரையில் நடை பெற்றது. இதில் துரைமுருகன், தி.மு.க செய்திதொடர்பாளர் இளங்கோவன் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "அரசியலுக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம். ரஜினி வருவதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி குடியரசுத் தலைவர் தேர்தல் வரையிலும்தான் இருக்கும் என்று எனது அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன். அதிமுக என்பது ஒரு கம்பெனி. அதில் யார் வேண்டுமானாலும் முதல்வர் என்ற மேனேஜர் பதவிக்கு வரலாம். தற்போது தொண்டர்கள் மூலம் முடிந்த அளவில் தி.மு.க. மக்கள் நலப்பணி செய்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. அதைப்பற்றிப் பேசத்தான் சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி வருகிறோம். ஜெயலலிதாவுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி நடைபெற வில்லை. காட்சிதான் நடைபெறுகிறது. ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். பிரதமரை சந்திப்பது மக்கள் நலனுக்காக இல்லை. அவர்கள் பி.ஜே.பி.க்கு கிடைத்த அடிமைகள்" என்று கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்