பா.ஜ.க விரித்துள்ள சதிவலையில் ரஜினிகாந்த் சிக்கிவிடக் கூடாது என்று எச்சரித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரஜினிகாந்த் தனியாக அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம், தென்காசியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறு கையில், 'நண்பர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது ஜனநாயக உரிமை. ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினிக் காக கதவு திறந்தே இருப்பதாக பா.ஜ தெரிவித்து வலைவிரித்திருக்கிறது. அது பாசவலை அல்ல. சதிவலை. அதில் ரஜினிகாந்த் சிக்கிவிடக் கூடாது. அவர் தனியாக அரசியலுக்கு வர வேண்டும். அதுவே அவருக்கு நல்லது. தனித்தன்மையுடன் அவர் செயல்படுவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஜன நாயகத்துக்கும் நல்லது. வகுப்புவாத சாதீயக் கட்சிகளுடன் அவர் இணைந்து செயல்படக்கூடாது என்பதுதான் ரஜினிகாந்த்துக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க அறிவித்தது. ஜெயலலிதா 500 கடைகளை மூடினார். 500 கடைகளை எடப்பாடியும் மூடிவிட்டு கடமை முடிந்ததாக இருந்தனர். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவால் தற்போது கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. அந்தக் கடை களையும் மாற்று இடத்தில் திறக்க இந்த அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால், பெண்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்களை காவல் துறையை வைத்து அடக்கி ஒடுக்க இந்த அரசு முயலுகிறது. மூடப்பட்ட கடைகளில் வேலை செய்து பணியிழந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். தமிழக அரசு முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. மத்தியில் ஆளும் பா.ஜ., இங்குள்ள அ.தி.மு.க-வை இரண்டு அணிகளாக உடைத்து தனது கைக்குள் வைத்து இருக்கிறது. அதனால் தமிழக அரசுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை துளியும் இல்லை.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்