நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பல அரசியல் கருத்துகளை வெளியிட்டு தமிழக அரசியல் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக் கிறார். அதிலும் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்ற அவரது கடுமை யான வாதம் தமிழக அத்தனை அரசியல்வாதிகளையும் மறைமுகமாக் தாக்கியதாக பார்க்கப்படுகிறது. நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ரசிகர்கள் சந் திப்பில் அதிரடி அறைகூவலை ரஜினி விடுத்தமை ரஜினியின் அரசியல் ஆசையை திரைபோட்டுக் காட்டியுள்ள அதேவேளை இதுவரைகாலமும் அவர் தருணம் பார்த்துக் காத்திருந்துள்ளார் என அவருக்கெதிரான கருத்துகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட் டனர். அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப் பட்டு, அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. ரஜினி வீட்டை முற்றுகை யிட வந்த போராட்டக்காரர்கள் உருவப் பொம்மைக்குள் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் சிறிய நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர். அதனால் அது வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து வீர லட்சுமி உள்ளிட்ட 30 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தனர். நீ நடிக்க வந்தியா இல்லை எங்களை அடக்கி ஆள வந்தியா எனவும், தமிழர் என்றால் வந்தவர் போனவர் யார் வேண்டுமானாலும் ஆண்டுவிட்டுப் போவீர்களா, எங்களை ஆள நீ ஒரு தமிழனா, நாங்கள் என்ன இழிச்சவாயர்களா என தாறுமாறான கடுமையான வார்த்தைகளால் ஆர்ப்பாட்டக்காரர் திட்டியவாறு ரஜினியின் உருவப் பொம்மையை கால்களால் உதைத்திருந்தனர். முக்கிய சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினிகாந்த்தின் வீட்டை நோக்கி செல்ல முயன்றதால், அவரது இல்லத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் ராதாரவி, ரஜினியின் அரசி யல் நகர்வு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளைக்கரன் 200 வருடங்கள் இந்தியாவில் இருந்தான். அதற்காக அவனை இந்தியன் என்று கூற முடியுமா? 44 வருடங்கள் தமிழகத்திலிருந்தால் ரஜினி பச்சைத் தமிழனா? தமிழக இணையதள பத்திரிகை ஒண்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலேயே அவர் தெரிவித்துள்ளார். நான், ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். திமுகவிலிருக்கும் என்னால் அவரை வரவேற்க முடியும். அவ்வளவுதான். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது, திமுக தலை வர் கருணாநிதிக்கு பத்திரிகை கொடுத்து அழைத்தார். கருணாநிதி வாழ்த்தி அனுப்பினார். இப்போது ரஜினி அழைத்தாலும் வாழ்த்தித்தான் அனுப்புவார். ஆனால் கருணாநிதியை, திமுகவைத் திட்டித்தான் எல்லாரும் வளர்வார்கள். நல்லவர்கள், வல்லவர்கள் என ரஜினி குறிப்பிட்ட நிறைய பேர் அரசியலில் இருக்கும்போது இவர் எதுக்கு அரசியலுக்கு வருகிறார் என்பதும் என் கேள்வி. இருந்தாலும் அவர் வரட்டும். தமிழக மக்களிடம் தான் சம்பாதித்தேன் என கூறுகிறார். அப்படியென்றால் தமிழக மக்களுக்கே அவர் செலவு செய்யட்டும். அதில் தவறு இல்லையே. மேலும் அவர் 44 வருஷம் தமிழ்நாட்டில் இருந்ததால், அவர் தன்னை பச்சைத் தமிழன் என்கிறார். வெள்ளைக்காரன் கூட 200 வருஷம் இந்தியாவில் இருந்தான். அதற்காக அவனை இந்தியன் என்று சொல்ல முடியுமா? இவர் ஏன் பயப்படுகிறார்?. நான் தைரியமாகச் சொல்வேன், நான் தெலுங்குதன் என்று. என் தந்தையார் தி.கவில் இருந்து மக்களுக்காகபேசியவர் உழைத்தவர் என்றாலும் நாங்கள் தெலுங்கர்கள் தான். ரஜினி ஏன் பச்சை தமிழன் என கூறுகிறார். அதனால் தானே இணையத்தில் அவரை விமர்சிக்கிறார்கள். இவ்வாறு நடிகர் ராதா ரவி கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்