டெல்லி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பணியாற்ற உரிமை இல்லை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம். இதற்காக பாடுபட்டு வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார். இதுகுறித்து மேலும் ஓ.பி.எஸ்., கூறியதாவது: இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம். ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்தும், அங்கு கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும் விசாரணை துரிதபடுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன், சுகேஷ் மீதான விசாரணையை விரைந்து நடத்த வேண்டும். மேலும் அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பணியாற்ற தார்மீக உரிமை கிடையாது. அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் சசியால் நியமிக்கப்பட்டார். இதனால், சீனிவாசன் வங்கி பணத்தை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சீனிவாசன் நியமனம் தவறானது. கட்சி பணத்தை கையாள திண்டுக்கல் சீனிவாசனுக்கு உரிமையில்லை. தொண்டர்களின் இயக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இதனை அவர்கள் சொல்லவில்லை. எங்களுடைய தர்ம யுத்தத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து விலகவில்லை. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக சென்று விடக்கூடாது. இரு அணிகளுக்கு இடையேயான பேச்சு ஆமை வேகத்தில் செல்கிறது. பேச்சுவார்த்தைக்கான தடைக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் யாருக்கு ஆதரவு என முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்