அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மாணவ, மாணவிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என மாணவர் சங்கத்தினர் கோரிக்கை வைத் திருந்தனர். இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் பல்கலைக்கழகம் முற்றுகையிடப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து புரட்சிகர மாணவ அமைப்பினர் இன்று காலை அண்ணா பல்கலைக்கழக வாயில் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் இல்லாமல் எவ்வாறு பட்டமளிப்பு விழா நடத்தப்பட முடியும்' என்று கேள்வி எழுப்பும் மாணவர்கள், 'துணை வேந்தர் கையெழுத்து இல்லாமல் வேறொருவரின் கையெழுத்துடன் வழங்கப்படுவது மோசடிக்கு இணையானது' எனக் கூறுகின்றனர். போராட்டத் தின் போது, 'படித்துப் பெற்ற சான்றிதழுக்கு மதிப்பில்லை' எனக் கூறி, பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வாங்கி எரிக்க முயன்ற மாணவர்களை போலீ ஸார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாது மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவையும் துணைவேந்தரே இல் லாமல் செயல்பட்டவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்