ஸ்ஃபுல் இயக்க தீவிரவாதி புர்ஹான் வாணி கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 34 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஹஃபீஸ் சயீது இவ்வாறு கூறியுள்ளார். காஷ்மீர் விடுதலை இயக்கத்தை முன் எடுத்த புர்ஹான் வாணியை காஷ்மீரிகள் அனைவரும் விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு படையினர் வாணியை சுட்டுக்கொன்ற பிறகு நடைபெறும் போராட்டத்தில் மக்கள் தாங்களாகவே முன்வந்து கலந்துக்கொள்வதாக ஹஃபீஸ் சயீது கூறியுள்ளார். இந்திய தரப்பில் எந்த அளவுக்கு தாக்குதல் நடத்தப்படுகிறதோ அதே அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண அமெரிக்காவை பாகிஸ்தான் வலியுறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால் அமெரிக்காவுடன் இருக்கும் உறவை பாகிஸ்தான் துண்டிக்க வேண்டும் என கூறியுள்ள ஹஃபீஸ் சயீது இதனை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் நடக்கும் கலவரத்துக்கு ஹஃபீஸ் சயீது மூலமாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிதியுதவி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ஆராய்வதற்காக பாகிஸ்தானின் அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைப்பெறுகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்திய தூதரை அழைத்து கண்டனத்தை பதிவு செய்து உள்ளதாக பாகிஸ்தானின் பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்