லக்னோ உத்தரப்பிரதேசத்தில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை அவரது தந்தையும் சகோதரரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலத் தின் சம்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரூபி என்ற 18 வயது பெண் இப்ராஹிம் என்னும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவரது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூபி தனது காதலர் இப்ராஹிமுடன் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட ரூபியின் சகோதரி இதுகுறித்து தனது தந்தை சம்ரோஸ் மற்றும் சகோதரர் இப்திகர் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ரூபி யிடம் சென்ற அவர்கள் அவரை கடுமையாக தாக்கினர். ஆனாலும் ஆத்திரம் அடங்காததால் தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கியால் ரூபியை சரமாரி யாக சுட்டனர். இதில் மார்பு மற்றும் முகத்தில் குண்டு பாய்ந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடன டியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்திலும் இப்ராஹிமை தான் திருமணம் செய்துகொள்வேன் என அவர் பிடிவாதமாக உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரூபியின் அண்ணி, இப்ராஹிமுடன் செல்வதில் ரூபி பிடிவாதமாக இருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் தங்களின் குடும்ப மானத்தையே வாங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டாலும் தான் இப்ராஹிமுடன் தான் செல்வேன் என கூறி வருகிறாள் என்றும் அவர் கூறினார். இதற்கு அவர் செத்தே போயிவிடலாம் என்றும் ரூபியின் அண்ணி கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்