நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதுகுறித்து கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்பட்டுவருகிறது. ‘ரஜினி வரவேண்டும்’ என் கிறது ஒரு தரப்பு, ‘அவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?’ என்கிறது மற்றொரு தரப்பு. இந்நிலையில், இந்த ’ஹாட் டாபிக்’ குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவு பின்வருமாறு... 'தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை, நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதுதான் எனக்குக் குழப் பத்தை ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள்? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர் களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன். படத்தின் துவக்கத்தில், சிவாஜி கணேசனின் காலை மட்டும்தான் காட்டி னார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்... அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்? வேலையில் லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்ஜுவின் பதிவுக்கு, நெட்டிசன்ஸ் மத்தியில் நல்ல பாராட்டுகள் கிடைத்துள்ளன. அவரின் பதிவு, அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்