தத்தெடுத்த பிள்ளையை அனாதையாக விட்டுவிட்டு தங்கள் பிள்ளை என்பதா என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.மேலும், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பால்தான் மெட்ரோ ரயில் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தை பெருமையோடு பெற்றிருக்கிறது சென்னை. ஆனால் இத்திட்டம் மத்திய பாஜக ஆட்சி அமைந்த பின்பு எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ விரைவுபடுத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உண்மை. தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு வேண்டிய முன்னேற்றத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு கொண்டு வரவில்லை என்ற குற்றச் சாட்டினை மற்றொரு நிரூபணம் மெட்ரோ ரயில். அதே போல் இந்நாட்டின் வளர்ச்சியை மெதுவாக்கியதால் காங்கிரஸுக்கு பங்கும் உண்டு. மாஸ்கோ, லண்டன், நியூயார்க் போன்ற நகரங்கள் 80-150 வருடங்களுக்கு முன்னே இத்திட்டம் வந்துவிட்டது. ஏன் இந்தியாவில் கொல்கத்தா 33 வரு டங்களுக்கு முன்பே இத்திட்டத்தை பெற்றுவிட்டது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நிறைவேற்றியிருக்க வேண்டும். இன்று ஸ்டாலின் மெட்ரோ ரயில் தங்களது பிள்ளை என்கிறார். தத்தெடுத்த பிள்ளையை அனாதையாக அம்போ என்று விட்டுவிட்டார்கள். பின்பு அதை தூக்கி சீராட்டி, பாராட்டி, இன்று ஓட விட்டது தற்போதைய மத்திய மாநில அரசுகள் என்பதை மறுக்க முடியாது. டெல்லியில் 3 மாநிலங்களை இணைக்கும் 194 கிலோ மீட்டர் மெட்ரோவை நிறைவடையச் செய்ய எடுத்துக் கொண்ட காலம் 4 வருடங்கள். ஆனால் சென்னையில் முதல் 10.15 கிலோ மீட்டர் முடிப்பதற்கு அதாவது டெல்லியின் நீளத்தில் 57 சதவீதத்தை முடிப்பதற்கு இங்கு 6 ஆண்டுகள் ஆகி யிருக்கிறது. அதுமட்டுமல்ல, திமுக இத்திட்டத்தை அறிவித்த ஆண்டு 2006. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டது 3 ஆண்டுகளுக்குப் பின் 2009-ம் ஆண்டு. ஆக அடிக்கல் நாட்டுவதில் இருந்த இந்த மெட்ரோ ரயில் திட்டம் சரக்கு ரயில் வேகத்தையும் விட மெதுவாகவே நகர்ந்தது திமுக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில். 21 செப்டம்பர் 2016 அன்று சென்னை சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை (9.6 கிலோ மீட்டா); கோயம்பேட்டில் நடைபெற்ற துவக்க நிகழ்ச் சியின் போது, வெங்கய்ய நாயுடுவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கெடுத்துக் கொண்டார். ஜுன் 2016-ம் ஆண்டு இந்திய மோடி அரசாங்கம் வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரம் வரை ஒப்புதல் அளித்து 3,770 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. இதுவரை மத்திய அரசு ரூபாய் 10,000 (பத்தாயிரம்) கோடி சென்னை மெட்ரோவுக்கு ஒதுக்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இது இந்தியா முழுவதும் கட்டி வரும் 324 கிலோ மீட்டர் மெட்ரோ ரயிலின் ஒரு பகுதி. (சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர், மும்பை) 520 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை கட்டுமானப் பணியில் இருக்கிறது என்பதையும் அறிவித்தார். அதாவது இன்று பாரத தேசம் முழுவதும் ஏற்கெனவே இருந்த மெட்ரோ ரயில் இயங்கிய தூரம் 324 கிலோ மீட்டர். இன்று மத்திய அரசின் உதவியோடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தூரம் 517 கிலோ மீட்டர். இன்று அனுமதி கொடுக்க ஆலோசனையில் இருக்கும் தூரம் 553 கிலோ மீட்டர். ஆக, மத்திய ஆட்சி எந்த அளவுக்கு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன் ஒரு பகுதியாக மோடி அரசு பதவி ஏற்றபோதே 2014-ம் ஆண்டே வெங்கய்ய நாயுடு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மெட்ரோ ரயில் திட்டம் விரைவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இன்று மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பினால் இது விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் அடி எடுத்து வைத்து விட்டு அங்கேயே நின்று விட்டார். அதை இன்று அடி அடியாக ஓடவிட்டிருப்பது இன்றைய மத்திய, மாநில அரசுகள்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். திமுக அரசு 14,000 கோடி ரூபாய் திட்டத்திற்கு வெறும் 1103 கோடி ரூபாய் அளித்துவிட்டு சும்மா இருந்து விட்டார்கள். வேண்டிய தொகையை அளித்து விரைவுபடுத்தியது. மத்திய அரசின் சாதனையே, எதையுமே காலம் குறிப்பிட்டு, குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையச் செய்வதுதான். அதில் மெட்ரோ ரயில் திட்டமும் அடங்கும். அதேபோல், வெங்கய்ய நாயுடு தலைமைச் செயலகத்தில் நடத்திய கூட்டத்தை குறை கூறுகிறார்கள். அவர் மத்திய அரசின் அதிகாரிகளை அழைத்து வந்து மாநில அரசு அதிகாரிகளோடு இணைந்து அமர்ந்து சுமார் 1500 கோடி ரூபாய்க்கான தமிழகத்தில் உள்ள திட்டங்களை உடனே நடைமுறைப்படுத்துவதற்கு அறிவித்திருக்கிறார். தமிழக மக்களும் இளைஞர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாலின், திருநாவுக்கரசு போன்ற அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் 1500 கோடி ரூபாய் திட்டம் கண்ணுக்கு தெரியாது. கூட்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இதுவே இவர்களின் விஷமத்தனமான சுயநல போக்கு அரசியல். ஏன் இதற்கு முன்னால் இத்தகைய நடைமுறை இருந்ததா என்று கேட்கிறார்கள். இதற்கு முன் வெளத்தினால் சென்னை தத்தளித்தபோது, இதே போல் ஒரு கூட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது என்பது உண்மை. ஆனாலும் இதுவரை உள்ள வளர்ச்சியின்மையும், பழைய முறைகளுமே தான் தொடர வேண்டுமா? தமிழக நலன் காக்க புதிய முறை கூட்டங்கள் நடத் துவதில் என்ன தவறு? பலன் பெறுவது தமிழகமும், தமிழக மக்களும்தானே. நடந்தது அரசியல் கூட்டமல்ல. தமிழக மக்களுக்கு அவசியமான கூட்டம் என்பதை வெங்கய்ய நாயுடு தெளிவுபடுத்தியிருக்கிறார்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்