விழுப்புரம் : மேற்கு வங்காளத்தில் இருந்து தொழில் தொடங்குவதற்காக விழுப்புரம் வந்த தொழிலதிபர் விவேக் பிரசாத் சில தினங்களுக்கு முன்பு சடல மாக கண்டெடுக்கப்பட்டார். கள்ளக்காதல் விவகாரம்தான் இவரது மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. தங்களின் சந்தோசத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாலேயே விவேக் பிரசாத்தை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாபு. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவேக் பிரசாத்,40. தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் புதுச்சேரியை அடுத்த ரெட்டியார் பாளையத்தில் மனைவி ஜெயந்தி,35 குழந்தைகளுடன் குடியேறினார். விழுப்புரத்தின் பூத்துறை கிராமத்தில் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடுகளை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரியை சேர்ந்த பாபு என்ற ஷேக் முகமது என்பவர் கவனித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் சடலமாக கண்டெடுக் கப்பட்டார். இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில் விவேக் மனைவி ஜெயந்தியும் ஷேக் முகமதுவும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலை பணிகளை கவனிக்க பாபுவிடம் நம்பி ஒப்படைத்தார் விவேக். ஆனால் விவேக்கின் மனைவி ஜெயந்திக்கும் ஷேக் முகமதுவிற்கு இடையே கள்ளத் தொடர்பு ஏற் பட்டது. இது விவேக்குக்கு தெரிய வர கணவன் -மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதுவே கொலை வரை சென்றுள்ளது. கொலை செய்தது ஏன் என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான் புதுச்சேரி வந்தபோது விவேக் பிரசாத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது தொழிற்சாலை பணிகளை என்னிடம் கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. விவேக் இல்லாத நேரம் தனியாக சந்தித்து வந்தோம். ஒருகட்டத்தில் இந்த விஷயம் விவேக்கிற்கு தெரிந்தது. அவரது மனைவி ஜெயந்தியை கண்டித்துள்ளார். இதை ஜெயந்தி என்னிடம் சொன்னார். இதனால் அவரை சந்திப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. விவேக் பிரசாத்தை கொன்றால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என ஜெயந்தி சொன்னார். அதற்கு நானும் சம்மதித்து அதற்கான முயற்சியில் இறங் கினேன். அதற்காக நேரம் பார்த்து காத்திருந்தேன். மே1ஆம் தேதி விடுமுறை நாளன்று கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு விவேக் வந்தார். அங்கு நான் விவேக்கை கத்தியால் குத்தினேன். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் இறந்தார். உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, கழிவறை தொட்டியில் போட்டு மறைத்தேன். விவேக் தற்கொலை செய்து கொண்டார் என போலீசை நம்ப வைக்க அவரது மோட்டார் சைக்கிளை வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் விட்டு விட்டு, ஹெல்மெட்டை கடலில் வீசினேன். போலீசார் தீவிரம் காட்டியதால் தலைமறைவானேன், விடாமல் விரட்டிய போலீஸ் சுல்தான்பேட்டை பகு தியில் பதுங்கி இருந்த என்னை அமுக்கி விட்டனர் என்று கூறியுள்ளார். அழகான கணவர், குழந்தைகள் வசதியான வாழ்க்கை அமைந்தும் முறை தவறிய உறவினால் கணவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்துள்ளார் ஜெயந்தி. இப்போது கள்ளக்காதலனுடன் சிறைக்கு சென்றுள்ளார். தந்தையையும் இழந்து, தாயும் இல்லாமல் குழந்தைகள்தான் இப்போது அநாதைகளாக நிற்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்