நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாதென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தற்போது அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்பு களுக்கு என நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. இதற்காகவே தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் தற்போது அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டத்தாவது: ‘பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் விதிமுறையின் படியே இத்தேர்வு நடத்தப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக செயல்படவோ, மாற்றுக் கருத்து தெரிவிக்கவோ போவதில்லை. நீட் தேர்வினைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து முன்னரே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது’ எனக் கூறி யுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்