சென்னை: அமைச்சரவையை மாற்றி அமைப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படுதீவிரமாக இருக்கிறார். ஆனால் சசிகலா கோஷ்டி அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுவதாக கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் இணையப் போவதாக கூறப்பட்டது. இதனால் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என செய்திகள் அடிபட்டன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடக்குமா? என்பது யாருக்குமே தெரியவில்லை. இப்போதும் கூட பேச்சுவார்த்தை குறித்து இரு கோஷ்டிகளும் பேசி வருகின்றன. இந்நிலையில் டெல்லியின் கோபத்துக்குள்ளாகி இருக்கும் அமைச்சர்களை கழற்றிவிட எடப்பாடி திட்டமிட்டு வருகிறாராம். அத்துடன் சசிகலா ஆதரவு அமைச்சர்களையும் கழற்றிவிடுவது என தீர்மானமாக இருக்கிறாராம். இது தொடர்பாக தமது ஆதரவு அமைச்சர்களுடன் எடப்பாடி சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார். எந்த ஒரு அமைச்சரை நீக்கினாலும் எதிராக பேட்டி கொடுக்கத்தான் செய்வார்கள்... அதற்காக டெல்லியை நாம் பகைக்க முடியாதே என கூறியுள்ளார் எடப்பாடியார்.அதேநேரத்தில் அப்படி யான கலகக் குரல் எழுப்புவர்கள் சிறிது காலம்தான் பேசுவார்கள்... அதற்கு பிறகு டெல்லி மிரட்டினால் அடங்கிவிடுவார்கள் என கொங்கு கோஷ்டிகள் கூறியுள்ளது. இந்த தெம்பில் விரைவில் அமைச்சரவையை மாற்றி அமைக்க இருக்கிறார் எடப்பாடியார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்