சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அரசு கவலைப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியின் போது தண் ணீர் தட்டுப்பாட்டை போக்க நீர்நிலைகள் முன்கூட்டியே தூர்வாரப்பட்டன என கொளத்தூர் தொகுதியில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வை யிட்டபின் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திமுக செயல்படுத்திய திட்டங்கள் குடிநீர் தட்டுப்பாடு போக்க நெம்மேலி, மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக கொண்டு வந்தது. அதேபோல் ராமநாதபுரத்தில் ரூ.616 கோடி யில் கூட்டுகுடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதில்தான் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அமைச்சர் மீது லஞ்சப்புகார் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு பெண் அதிகாரியை மிரட்டியதாக செய்தி வந்துள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் தாகத்தை போக்க திமுக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை திமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என மு.க. ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்