நீதிபதி கர்ணன் சென்னையில் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை' என்று கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து கொல்கத்தா காவல்துறையினர், தமிழக காவல்துறையினரின் உதவியுடன் நீதிபதி கர்ணனைத் தேடி வருகின்றனர். இருப்பினும், இதுவரை கர்ணன் இருக்கும் இடத்தை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கைது உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு வில், 'நீதிபதி கர்ணன்சென்னையில்தான் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை. நீதிபதிகள் உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்