அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியது குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலராக நியமிக்கப்பட்டவர் ராஜமீனாட்சி. ஒப்பந்த அடிப் படையில் நியமிக்கப்பட்டுள்ள தன்னை நிரந்தரமாக பணியில் அமர்ந்த சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ராஜமீனாட்சி. இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையர் கரண்சின்காவை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் சரோஜா மீது, ராஜமீனாட்சி லஞ்சப் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலை வழங்க அமைச்சர் சரோஜா என்னிடம் லஞ்சம் கேட்டார். பணியிட மாற்றத் துக்காக எனது தந்தையிடம் பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து என்னை சரோஜா மிரட் டினார். அப்போது, அவர் என்னை தரக்குறைவாக பேசினார். பணம் தரவில்லை எனில் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக அமைச்சர் என்னை மிரட்டினார். ராஜி னாமா செய்யாவிடில் கொலை செய்து விடுவதாக சரோஜா மிரட்டினார். எக்காரணத்தைக் கொண்டும் வேலையை ராஜினாமா செய்யமாட்டேன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்