சென்னை, அன்னிய செலாவணி மோசடி வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது அக்கா மகன்கள் சுதாகரன், பாஸ்கரன் மற்றும் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது. அந்த வழக்குகள் மாஜிஸ்திரேட் மலர்மதி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடர்ந்த மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம், "சுதாகரன் எங்கே," என மாஜிஸ் திரேட் கேள்வி எழுப்பினார். அதற்கு, "பெங்களூரு சிறையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி, அவரை ஆஜர்படுத்த முடியவில்லை," என அமலாக் கத்துறை வழக்கறிஞர் கூறினார். அதற்கு, கண்டனம் தெரிவித்த மாஜிஸ்திரேட் 19ம் தேதி சுதாகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என உத்தர விட்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்