திமுகவிடம் அரசியல் நாகரிகம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழாவில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் சட்டப் பேரவை வைர விழாவில் மதவாத கட்சிகளை அழைக்க மாட்டோம் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாள ருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "திமுகவிடம் அரசியல் நாகரிகம் கிடையாது. பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏன் திமுக கூட்டணி வைத்தது? தமிழகத்தில் அரசியல் நாகரிகம் வளர்ந்தது என்று நினைத்தோம் ஆனால் அது தவறு" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்