img
img

உற்சாகத்துடன் அவரை சந்தித்துப் பேசிய தருணத்தைப் பகிர்கிறார்.
புதன் 10 மே 2017 15:26:57

img

அமெரிக்கா போகும் முன்பும், போன பிறகும்கூட கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையைச் சந்திப்போம், அவர்கிட்ட பேசுவோம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கல. ஆனா நடந்த விஷயம் எல்லாமே கனவுமாதிரிதான் இருக்கிறது' என நெகிழ்ச்சியாகப் பேசும் லட்சுமி, மதுரையைச் சேர்ந்த பேரா சிரியை. தன் மகன் வேலை செய்யும் அமெரிக்காவிலுள்ள கூகுள் தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருந்தவர், அங்கு சுந்தர் பிச்சையை சந்தித்து புகைப்படமும் எடுத்திருக்கிறார். உற்சாகத்துடன் அவரை சந்தித்துப் பேசிய தருணத்தைப் பகிர்கிறார். "என்னோட பையன் சரவணன் கணேஷ், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிற கூகுள் தலைமை அலுவலகத்துல சாஃப்ட்வேர் இன்ஜி னியரா வேலை செய்கிறான். தான் வேலை செய்ற ஆபீஸையும், அமெரிக்காவின் பல இடங்களையும் சுத்திக்காட்டுறேன்னு சொல்லி என்னை அமெரிக் காவுக்கு வரச்சொன்னான். அதன்படி கடந்த 20 நாளைக்கு முன்னாடி மதுரையில் இருந்து அமெரிக்கா போனேன். அங்க பல இடங்களைச் சுத்திப்பார்த்த நிலையில, சில தினங்களுக்கு முன்னாடி, தான் வேலை செய்யும் கூகுள் அலுவலகத்துக்குப் பையன் அழைச்சுக்கிட்டுப் போனான். அந்த நிறுவனத்துக்குள்ள போக நிறைய கெடுபிடிகள் இருந்துச்சு. எனக்குன்னு தனியா ஒரு பார்கோடுடன் விசிட்டர் பாஸ் ஒன்றை வாங்கிக்கொடுத்து, நிறுவனத்துக்குள்ள அழைச்சுக்கிட்டுப் போனான். நம்மோட படிப்பு மற்றும் மற்ற பெரும்பாலான வேலைகளையும் எளிதாக்கும் கூகுள் நிறுவனத்தைப் பத்தி நிறைய கற்பனைகளை மனசுக்குள்ள வெச்சிருந்தேன். அந்த நிறுவனத்தின் முகப்புப் பகுதியை பிரமிப்போடு பார்த்தபடியே உள்ளே நுழைஞ்ச பிறகும் பிரமிப்பு அதிகமானதே தவிர, குறையவேயில்லை. பெரிய கட்டடங்கள், உள் கட்டமைப்பு வசதிகளின் பிரமாண்டம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்னு பார்த்த விஷயங்களோடு மேலும் பல விஷ யங்கள் ஆச்சர்யத்தை அதிகப்படுத்துச்சு. நம்ம இந்திய மற்றும் தமிழக இளைஞர்களை அதிகமாகப் பார்க்க முடிஞ்சுது. தவிர அங்க வேலை செய் றவங்களோட பிள்ளைகளுக்கான தங்குமிடம், வேலை செய்பவர்களுக்கான ஓய்வு அறை, சுற்றிலும் எல்லா இடங்களிலும் ஃப்ரிட்ஜில் பழங்கள், உணவுப் பொருட்கள், எந்த நேரமும் கிடைக்கும் இலவச உணவுகள், மசாஜ் செய்யும் இடங்கள், லாண்டரி ரூம், ஒரு பில்டிங்கில் இருந்து இன்னொரு பில்டிங் போக சைக்கிள் வசதி, விளையாடும் வசதி, நீச்சல் குளம்னு அங்க பார்த்த விஷயங்கள் எல்லாமே ஆச்சர்யமா இருந்துச்சு" என்பவர் சுந்தர் பிச்சையைச் சந்தித்து உரையாடிய தருணத்தை நெகிழ்ச்சியாகக் கூறுகிறார். " இதுதான் கூகுள் சர்ச் டீம், பிளே டீம், டேட்டா டீம்னு ஒவ்வொரு பகுதியையும், என்னோட பையன் சுத்திக்காட்டினான். தொடர்ந்து தன்னோட மேனேஜர் கிட்ட அழைச்சுட்டுப்போய் அறிமுகப்படுத்தினான். அவர் அமெரிக்கராக இருந்தாலும், தமிழ்ல 'வணக்கம்'னு சொல்லி என்னை அறிமுகப்படுத்திகிட்டு, அப்புறமா அவர்கிட்ட கொஞ்ச நேரம் இங்கிலீஸ்ல பேசினேன். நானும் பையனும் அடுத்தடுத்து கூகுள் ஆபீஸூக்கு உள்ளேயே ஒவ்வொரு பகுதியா பார்த்துக்கிட்டே போய்க்கிட்டிருந்தோம். அதுவரைக்கும் அங்கங்க கும்பலா நின்னு பேசிக்கிட்டும், ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கிட்டும் இருந்த நிலையில, திடீர்னு ஆழ்ந்த அமைதி நிலை ஏற்பட்டுச்சு. என்னன்னு பார்த்தா, அங்க ஒரு பில்டிங்ல இருந்து இன்னொரு பில்டிங்குக்குப் போற பாதையில அந்த நிறுவனத்தோட சிஇஓ-வான சுந்தர் பிச்சை கேசுவலா நடந்துபோயிட்டு இருந்தாரு. சீட்ல உட்கார்ந்திருந்தவங்க, கும்பலா நின்னு பேசிட்டிருந்தவங்க எல்லோரும் அப்படியே அமைதியா எழுந்து நிற்க ஆரம்பிச்சிட்டாங்க. அவரைப் பார்த்த உற்சாகத்துல, 'டேய் அவர்ட்ட போய்ப் பேசலாமா?'னு பையன்கிட்ட கேட்டேன். 'சரி'னு பையன் சொல்ல, தைரியமா நாங்க ரெண்டு பேரும் அவர் பக்கத் துல போனோம். போன் பேசியபடி நடந்து வந்த நிலையில, போன் பேசி முடிச்சதும் எங்களைப் பார்த்து நின்னாரு. தன்னைப் பத்தியும், என்னைப் பத்தியும் பையன் அவர்கிட்ட அறிமுகப்படுத்தினான். சுந்தர் சார் உடனே எங்களைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தார். நான் உடனே, 'வணக்கம் சார். என்னோட பெயர் லட்சுமி. மதுரையில பேராசி ரியையா வேலை செய்துகிட்டிருக்கேன். இங்க வேலை செய்யும் பையனைப் பார்க்க வந்திருக்கேன்'னு சொன்னேன். உடனே புன்னகைத்தபடியே, 'நானும் மதுரையில்தான் பிறந்தேன். என்னோட அப்பா அம்மாவும் மதுரையைச் சேர்ந்தவங்கதான். நானும் மதுரைக்காரன்தான்'னு ரொம்பவே பெருமையா சொன்னாரு. 'நீங்க ஆசிரியர்னு சொன்னீங்க. என்ன பாடம்'னு கேட்டார். 'கணிதம்'னு சொன்னேன். 'ஓ...சிறப்பு'னு சொன்னார். அந்தத் தருணத்துல அவருக்கு ஒரு போன் கால் வந்துச்சு. போனை அட்டெண்டு செய்து, 'நான் ஒரு முக்கியமான வேலையா இருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சுக் கூப்பிடுறேன்'னு ஆங் கிலத்தில் எதிர்ப்புறத்தில் பேசினவர்கிட்ட சொல்லி போன் காலைக் கட் பண்ணினாரு. தொடர்ந்து எங்கிட்ட சில விநாடிகள் பேசிய அவர்கிட்ட, 'உங்ககூட ஒரு போட்டோ எடுக்கலாமா'ன்னு ஆசையா கேட்டேன். 'நிச்சயமா. எடுத்துகிட்டாப் போச்சு'ன்னு சொன்னவரை நெருங்கி நின்னேன். புன்னகைத்தபடியே அவரும் நானும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, என் பையன் போட்டோ எடுத்தான். 'உங்களை சந்திப்பேன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. ரொம்பவே மறக்க முடியாத தருணம் இது. ஆனந்தமா இருக்கு. நன்றி'ன்னு அவர்கிட்ட சொன் னேன். 'எனக்கும் சந்தோஷம். நன்றி. நேரமாச்சு. வரேன்'னு சொல்லிட்டு வேறு பில்டிங்கை நோக்கிச் செல்ல ஆரம்பிச்சாரு. சாதாரணமா நம்ம பயணத் துல சந்திக்கிற ஒரு மனிதரைப் போலவேதான், அவரையும் சந்தித்துப் பேசின தருணம் இருந்துச்சு. அவ்வளவு எளிமையா, இயல்பா, முழுக்க தமிழ்லயே பேசினார். சுந்தர் பிச்சையை சந்திச்சுப் பேசின பிறகு என் பையனோட வேலை செய்யும் நண்பர்கள் நிறைய பேர், 'என்ன ஆன்ட்டி, பல வருஷமா நாங்க இந்த ஆபீஸ்ல வேலை செய்துகிட்டு இருக்கோம். சுந்தர் சாரைப் பார்க்கிறதே அரிது. அதுவும் அவர்கிட்ட பேசும் வாய்ப்பும்கூட எங்களுக்கு இதுவரைக்கும் கிடைச்சதேயில்லை. நீங்க இப்போதான் ஆபீஸ்கே வந்திருக்கீங்க. எப்படி உங்களால மட்டும் அவர்கூட பேசி, போட்டோ எடுக்க முடிஞ்சுது'னு கேட் டாங்க. 'நான்கூட இதுவரைக்கும் சுந்தர் சாரைப் பார்த்ததேயில்லை'ன்னு என் பையன்கூடச் சொன்னான். அதனால அந்தத் தருணமே மறக்க முடியாத நிகழ்வா மாறிடுச்சு. கிட்டத்தட்ட அஞ்சு கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில், ஏராளமான பெரிய பில்டிங்குகளோடு இருந்த கூகுள் நிறுவனத்தின் பல இடங்கள்ல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் லட்சுமி.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img