அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் ஆஜர்படுத்த சுதாகரனுக்கு வாரன்ட் பிறப்பித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம். இதைத்தொடர்ந்து மூவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி டி.டி.வி.தினகரன் கைது செய்யப் பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், சுதாகரன் மற்றும் பாஸ்கரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜராக சுதாகரனுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்று சுதாகரன் ஆஜராகாததால், அவருக்கு வாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சிறையில் உள்ள சுதாகரனை ஜூன் 7ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவால் கர்நாடக சிறையில் இருக்கும் சுதாகரன் சென்னை அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்