ஆம் ஆத்மி’ கட்சியின் முன்னாள் அமைச்சர் அளித்த ஊழல் புகாரின் பேரில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசா ரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ’ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினரும், டெல்லி நீர்த்துறை அமைச்சருமான கபில் மிஸ்ரா லஞ்சப் புகார் அளித்தார். கபில் மிஸ்ரா தனது புகார் குறித்து கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் முன்னரே லஞ்ச ஒழிப்புத்துறை இக்குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்துள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால் தன்னுடைய கட்சி உறுப்பினர் சத்யேந்தர் ஜெயினிடமிருந்து 2 கோடி ரூபாய் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்புகாரினை கபில் மிஸ்ரா, டெல்லி ஆளுநர் அனில் பாய்ஜ்லாலிடம் அளித்துள்ளார். ஆளுநர் மூலம் இவ்வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள் ளது. இந்நிலையில் ஆளுநரின் உத்தரவின் பேரில் இன்னும் ஏழு நாள் கால அவகாசத்திற்குள் விசாரணை குறித்த முழு அறிக்கையினை லஞ்ச ஒழிப் புத்துறை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்