img
img

“மோடி ஒரு வாய்ச்சொல் வீரர்!” நக்மா
திங்கள் 08 மே 2017 12:46:43

img

''தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மோடியின் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பல அழுத்தங்களையும் தமிழ்நாட்டுக்கு கொடுத்து வருகிறது. தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே கெடுதல்தான் செய்துவருகிறது. பி.ஜே.பி. அரசு இந்தியாவுக்கு தேவையற்றது. அதனால் பிரதமர் மோடிக்கு வளையல்களை பரிசளிப்பேன்'' என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா. இதுகுறித்து நக்மாவை சந்தித்துப் பேசியபோது... ''இந்தியாவுக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லி சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால், இதுவரை என்ன நல்லது செய்திருக்கிறார்? அவரால் இன்றுவரை மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். கறுப்பு பணத்தை அழிப்பேன் என்று ஆவேசமாக சொல்லிவந்தார். அதனால் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக ஆக்கினார். 'இதனால் கறுப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களில் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன்' என்று கூறினார். கறுப்பு பணத்தை அழித்துவிட்டாரா, இல்லை தற்போது நடந்துவரும் ஊழலைதான் தடுத்துவிட்டாரா? பி.ஜே.பி-யினர்தான் ஊழலே செய்துவருகிறார்கள். அப்படி இருக்க எப்படி இவரால் ஊழலை தடுக்க முடியும்? மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் கொண்டுவருவேன் என்று கூறினார் அதையாவது செய் தாரா? இவராலும், பி.ஜே.பி-யாலும் இந்தியாவுக்கு ஒரு நன்மையையும் கிடையாது. தான் வெற்றி பெற்ற மாநிலத்தில் மட்டும் நல்லது செய்வது போல நடிக்கிறார். சமீப காலமாக ஹைட்ரோகார்பன் திட்டம், விவசாயிகள் பிரச்னை, தண்ணீர் பிரச்னை என்று தமிழகத்துக்கு எவ்வளவு பிரச்னைகளை கொடுக்க முடியுமோ... அந்த அளவுக்கு பிரச்னை மேல் பிரச்னையைக் கொடுத்து வருகிறார். எப்படியாவது மக்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து தமிழகத்தில், பி.ஜே.பி மறைமுகமாக காலூன்ற பல வேலைகளைச் செய்து வருகிறார். அதன்படியே காய் நகர்த்தப்பட்டு அரசியல் விளையாட்டுகள் நடந்தேறி வருகிறது. நாட்டுக்குள்தான் இவ்வளவு பிரச்னை என்றால் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு இதை விட அதிகமான பிரச்னைகள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் ராணுவ வீரர்களை கொன்று வருவது வாடிக்கையாகி வருகிறது. நாட்டுக்குள்ளும் நக்சல்களால் பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர். பக்கத்து நாடுகள் இந்தியாவைப் பங்கு போட்டுக் கொள்ள துடிக்கிறது. இறந்துபோன ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு இதுவரை மோடி அரசு என்ன செய்திருக்கிறது? இனி ராணுவ வீரர்கள் கொல்லப்படமால் இருப்பதற்காக என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்திருக்கிறார்கள்? இதையெல்லாம் செய்வேன் என்று சொல்லித்தானே பிரதமர் ஆனார் மோடி. ஆனால் இது வரைக்கும் நாட்டுக்குள் இருக்கும் மக்களுக்கும், நாட்டு எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும் என்ன நல்லது செய்திருக்கிறார்? அவர் உண்மையில் ஒரு வாய் சொல் வீரர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img