ஒடிசாவில், 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநில அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய் துள்ளார். இதையடுத்து, ஒடிசா சட்டசபை சபாநாயகர் நிரஞ்சன் பூஜாரி, கடந்த சில தினங்களுக்கு முன் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். தொகுதி பணியை பார்க்க செல்வதாகக் கூறி அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அமைச்சர்கள் சஞ்சய் தாஸ்வர்மா, அருண் குமார் சாஹு, பிரதீப் பாணி கிரஹி, புஷ்பேந்திர சிங் தேவ், பிரகாஷ் தாஸ் உட்பட, பத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இது குறித்து நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கட்சி பணிக்காக உழைக்க, தானாக முன் வந்து, அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கு நன்றி. குறிப்பாக, அமைச்சரவை மாற்றம் மக்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும்'' என்றார். இதற்கிடையே ஒடிசாவில் 11 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒடிசா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்