செம்மரக் கடத்தல் புகாரில் கைதான மாடலிங் அழகியும் விமானப் பணிப்பெண்ணுமான சங்கீதா கொடுத்த தகவலின் பேரில், தமிழ்நாடு உள்பட மூன்று மாநில முக்கியப் புள்ளிகளை ஆந்திர போலீஸார் குறிவைத்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கீதா சாட்டர்ஜி, திருமணமானவர். செம்மரக் கடத் தல் விவகாரத்தையும் ஏதோ தரமான வணிகம் என்று கருதி, அதில் சங்கீதா தீவிரமாக ஈடுபட்டுவந்தார். தமிழ்நாட்டின் வட மாவட்ட கூலித் தொழிலாளிகள் எல்லாம் ஆந்திர போலீஸாரால் சுடப்பட்டு செத்துக்கொண்டிருக்க, சங்கீதா மட்டும் போலீஸில் சிக் காமல் தப்பித்துக்கொண்டேயிருந்தார். சங்கீதாவை போலீஸ் தேடிச்செல்லும்போதெல்லாம் அவருக்கு தகவல் முன்னரே போய்ச் சேர்ந்திருக்கும். சங்கீதாவும் தப்பிவிடுவார். பல ஆண்டுகளாய் இப்படி போலீஸுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருந்த சங்கீதா, கடந்த மார்ச் 28-ம் தேதி, ஆந்திராவின் சித்தூர் போலீஸாரிடம் கொல் கத்தாவில் பிடிபட்டார். 'செம்மரக் கட்டைகளைக் கடத்தி விற்பதில் அதிக ஞானம் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த லட்சுமணனைத் தன்னுடைய கடத்தல் தொழிலுக்காகவே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டவர் சங்கீதா' என்கின்றனர், ஆந்திர போலீஸார். சித்தூர் சிறைவாசியாக தற்போது அடைபட்டிருக்கும் சங்கீதா, போலீஸ் விசாரணையின்போது, 'எனக்கு ஒன்றுமே தெரியாது' என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார். போலீஸாரின் அடுத்தகட்ட விசாரணை சற்று இறுகவே, செம்மரமாகவே பேச ஆரம்பித்திருக்கிறார் சங்கீதா. "தமிழ்நாடு, கர்நாடகா, கொல்கத்தாவில் எனக்கு ஆட்களைத் தெரியும். அவர்களிடம் ஆர்டர் பெற்று, சொன்ன இடத்துக்கு கட்டைகளை அனுப்பி வைப்போம். எனக்கு அந்த ஆட்களையும் தெரியும், அவர்களின் இடத்தையும் தெரியும்' என்ற சங்கீதாவின் வாக்குமூலத்தால், ஃபிளைட் ஏறியி ருக்கிறது ஆந்திர போலீஸ்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்