டெல்லி, துக்ளகாபாத் பகுதியில் இயங்கிவருகிறது, ராணி ஜான்சி சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளி. விடுதியுடன்கூடிய பள்ளியில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இன்று காலை, இந்தப் பள்ளியின் அருகே ஒரு கெமிக்கல் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்தது. இதனால், மாணவ மாணவிகள் கண் எரிச்சலுக்கும் தொடர் இருமலுக்கும் ஆளானார்கள். சிறிது நேரத்தில் பல மாணவ மாணவிகள் மயக்கம்போட்டு விழுந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக ஆம்புலன்ஸும் காவல்துறையினரும் விரைந்து வந்தனர். மயக்கமடைந்த 110-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் மீட்கப்பட்டு, அருகில் இருந்த மூன்று மருத்துவமனைக ளில் அனுமதிக்கப்பட்டனர். மாணவ மாணவிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. உடனடியாக, அந்தப் பகுதியில் பெற் றோர்களும் பொதுமக்களும் கூடி யதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாயுக் கசிவு, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி, பள்ளியிலிருந்து அனைவரும் வெளியேற்றப் பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்