சசிகலாவின் பதவியைப் பறிக்க, முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ குணசேகரன் புது ஐடியா கொடுத்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க பிரிந்தது. பன்னீர்செல்வத்துக்கு 12 எம்எல்ஏ-க்களும், 10-க்கு மேற் பட்ட எம்பி-க்களும் ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து செயல்பட்டுவருகின்றனர். மேலும், மதுசூதனன், மனோஜ்பாண்டியன், பி.ஹெச். பாண்டி யன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சசிகலா தலைமை பிடிக்காமல், பன்னீர்செல்வத்தை ஆதரித்து வருகின்றனர். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனும் சிறை யில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் ஈடுபட்டுவருகின் றனர். முதல்கட்டமாக, இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. அதன்பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர் அகற்றப்பட்டது. இதை வரவேற்ற பன்னீர்செல்வம் அணியினர், 'ஜெயலலிதா மரணம்குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைசெய்ய வேண்டும், சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' என்று இரண்டு நிபந்தனைகளை விதித்தனர். ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க பழனிசாமி அணியினர் மறுத்துவருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. இதனிடையே, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், நேற்று முதல் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். கட்சியைப் பலப் படுத்துவதற்காக தொண்டர்களை அவர் சந்தித்துவருகிறார். நேற்றிரவு நடந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், உள்ளாட்சித்தேர்தலுக்கு முன்பே சட் டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அதிரடியாகப் பேசிய பழனிசாமி, தன் அணி யினரை அதிர்ச்சியடையவைத்தார். இந்நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ குணசேகரன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, 'பன்னீர்செல்வம் அணி யினர், பகல்கனவு காணாமல் இரவில் ஓய்வெடுக்க வேண்டும்' என்று கூறி, அதிரடியை ஏற்படுத்தினார்.'உடனிருப்பவர்களின் பேச்சைக் கேட்காமல், பேச்சுவார்த்தையில் பன்னீர்செல்வம் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த குணசேகரன், 'இருவரும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டினால்தான் சசிகலா பதவி பற்றி நடவடிக்கை எடுக்கமுடியும்' என்று கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்