கொடநாடு கொலை வழக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சயனிடம் நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா இரண்டு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.முரளி ரம்பா, 'சயன் தற்போது சுயநினைவுடன் உள்ளார். சயனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. கொடநாடு காவலாளி கொலை தொடர்பாக சயனிடம் விசாரணை தொடரும். கூடிய விரைவில் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரும் கைது செய்யப்படுவர்' என்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மேலும் அவரின் நண்பர் சயன், மற்றொரு விபத்தில் காயமடைந்தார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். இதையடுத்து, விபத்தில் காயமடைந்த சயனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்