விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெளிச்சம் தொலைக்காட்சியில் ரெய்டு நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதால், இதுபோன்ற அவதூறு தகவல்களைப் பரப்புகின்றனர்' எனக் கொதிக்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், முதல் நபராகச் சென்று சந்தித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். 'சிகிச்சை தொடர்பான மர்மத்தை விலக்கும் வகையில் திருமாவளவனுக்கு சசிகலா தரப்பில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டது' என செய்தி வெளியானது. இதன்பிறகு, தமிழக அரசைப் பணிய வைக்கும் வகையில் தொடர் ரெய்டுகள் நடந்தபோதும், மத்திய அரசை விமர்சித்தார் திரு மாவளவன். இந்நிலையில், திருமாவளவனின் அலுவலகத்திலும் தொலைக்காட்சியிலும் வருமான வரித்துறை ரெய்டு நடப்பதாக தகவல் வெளியானது. 'சசிகலா குடும்ப உறவுகள் மூலம் திருமாவளவன் ஆதாயம் அடைந்தார்' என்றரீதியில் தகவல்கள் பரவியது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு கொதித்துப் போய்விட்டார் திருமாவளவன். 'ரெய்டு உண்மையா?' என வி.சி.க செய்தித் தொடர்பாளர் வன்னியரசுவிடம் கேட்டோம். "அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். நாங்கள் வெளிச்சம் அலுவலகத்தில் இருக்கிறோம். சோதனை என்ற பெயரில் எந்த அதிகாரிகளும் வரவில்லை. அலுவலக நிர்வாகத்தையும் வெளிச்சத்தில்தான் நடத்துகிறோம். இருட்டில் நாங்கள் தொலைக்காட்சியை நடத்தவில்லை. யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க அரசின் செயல் பாடுகளை விமர்சித்து வருகிறார் எங்கள் தலைவர் திருமாவளவன். அண்மையில், டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்ட விதம் குறித்தும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இதுபோன்ற தகவல்கள் வெளியாகின்றன. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கும் பா.ஜ.க அரசின் முயற்சி, ஒருநாளும் ஈடேறாது" என்றார் கொதிப்புடன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்