img
img

தடைகளைத் தகர்த்தெறிந்தார்
புதன் 03 மே 2017 13:18:17

img

வியாபாரம் செய்யத் தொடங்கிய காலக் கட்டத்திலிருந்து வெளியில் தானாகச் சென்று எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் வியாபாரம் தொடர்பாக நான் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி, அண்மையில் மலேசிய நண்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் வர்த்தக வழிகாட்டிக் கருத்தரங்குதான். வியாபாரத்தில் பல வகையிலும் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்த நிகழ்ச்சியும் அதுதான் என்கிறார், நீலாயைச் சேர்ந்த லெட்சுமி அழகுநாயுடு. 10 ஆண்டுகளுக்கு முன்பு நீலாய் தபால் நிலையத்திற்கு முன்பு நாளிதழ்களை விற்றதிலிருந்து லெட்சுமியின் வியாபாரம் பயணம் தொடங்குகிறது. இடை யில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக நாளிதழ்கள் விற்பதை விட்டு பள்ளிகளுக்கு முன்பு கொய்யாப்பழங்களை 20 காசுக்கு விற்கத் தொடங் கினார். காலையிலும் மாலையிலும் வியாபாரம் செய்து வந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், அங்கேயும் அவரின் வியாபார வளர்ச் சிக்குத் தடைகள் வந்தன. ஆனால், அவர் உள்ளத்தைத் தளரவிடவில்லை. நீலாய் நகரில் ஒருவர் சாலையோரத்தில் குடை வண்டியில் முறுக்கு போன்ற பலகாரங்களை விற்பதைப் பார்த்துள்ளார். ஆனால், ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அந்த விற்பனை செய்வார். இருப்பினும், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வியாபாரத்தைத் தொடர்ந்து செய்யுமாறு அவர் லெட்சுமியைக் கேட்டுள்ளார். சாலையோர விற்பனையாக இருந்தால் என்ன, முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று அதை அவரிடமிருந்து பெற் றுக்கொண்டு மேற் கொண்டு தொடர்ந்துள்ளார். ஆனால், அவரைப் போல் ஆண்டிற்கு ஒருமுறை என்றில் லாமல் வாரம் முழுவதும் வியாபாரம் செய்யத் தொடங்கினார். முன்னேற்றத்தை நோக்கி நாம் முதல் அடி எடுத்து வைத்தால் தடைகள் தானாகவே 10 அடி எடுத்து வைத்து வருமே! அந்த வியாபாரத்திலும் பல பிரச்சினைகள். அங்கு வியாபாரம் செய்யக் கூடாது எனக் கூறி நீலாய் நகராண்மைக் கழகம் அவருடைய பொருட்களை எல்லாம் அலுவலகத்திற்குக் கொண்டு சென்ற அனுபவம் எல்லாம் அவருக்கு உண்டு. அவரின் அயராத மனத்தையும் அவர் சந்திக்கும் சவால்களையும் கண்ணுற்ற அங்குள்ள அடகுக் கடையின் சீன உரிமையாளர், கடையின் முன்பகுதியில் வியாபாரம் செய்ய எழுத்துப்பூர்வமாக அனுமதி கொடுத்தார். அப்போது ஏற்பட்டதுதான், அவரின் வாழ்க்கையின் திருப்புமுனை! தொடர்ந்து கச்சாங் பூத்தே வியாபாரத்தைச் செய்து வந்தார். வாடிக்கையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடுமையான வெயிலிலும் மழையிலும் அவர் உழைப்பதைக் கண்ட சீன மாது, தன்னுடைய கடையை அவருக்கு வாடகைக்கு விட முன் வந்தார். பெரிய முதலீடு இல்லாமல் அதை ஏற்றுக் கொள்ள லெட்சுமி தயங்கினார். ஆனாலும், அந்தச் சீன மாது அவரை விட்டபாடில்லை. லெட்சுமியின் மீதுள்ள நம் பிக்கையால் முதலீட்டுப் பணத்தை மொத்தமாகச் செலுத்தாமல் தவணை முறையில் செலுத்துமாறு கூறினார். கணவரிடம் ஆலோசனை கேட்டபோது அவரும் ஊக்கம் கொடுத்ததோடு வியா பாரத்தில் பக்கப்பலமாகத் துணைநின்றார். கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை விரிவாக்கி 2010ஆம் ஆண்டில் நீலாயில் கச்சாங் பூத்தே கொள்முதல் கடையை முதன்முதலாகத் திறந்தார். மக்க ளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கடையின் ஒரு பகுதியில் பூசைப் பொருட்கள் மற்றும் பலகாரம் விற்கத் தொடங்கினார். பலகாரங்களைச் சுயமாகத் தயாரிக்க விருப்பம் இருந்தாலும் கற்றுத் தர யாரும் முன்வரவில்லை. யூடியூப் போன்ற வற்றின் வழி சொந்தமாகப் பலகாரங்களைத் தயாரிக் கக் கற்றுக்கொண்டு பல சிரமங்களுக்கிடையில் இன்று பலகார வியாபாரத்திற்கும் வாடிக்கையாளர் வட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளார். இப்படி வியாபாரத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அடகுக் கடையின் முன்பு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிய அந்தச் சீனர், தன் னுடைய இன்னொரு கடையையும் எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். எடுத்த உடனேயே அகல கால் வைக்கக்கூடாது என்று எண்ணினார் லெட்சுமி. இருப்பினும், கணவர் துணைநின்ற காரணத்தால் துணிவோடு 25,000 வெள்ளி முதலீட்டில் அந்தக் கடையையும் எடுத்துக்கொண்டார். அந்தப் பகுதியில் சரியான மளிகைக் கடை இல்லாததால் அந்தக் கடையை மினி மார்க்கெட்டாக மாற்றியமைத்தார். அந்தப் பகுதியில் நிறைய இந்தியர் கள் இருந்த காரணத்தினால் மினி மார்க்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வியாபாரத்தை இப்படியே நிறுத்திக் கொள்ளாமல் ரொட்டிகள் தயாரிக்கும் வகுப்பிலும் கலந்துகொண்டு சொந்த மாக ரொட்டிகளையும் தயாரிக்கத் தொடங் கினார். இந்த வகுப்பிற்குச் சென்றவர்களில் இவர் மட்டுதான் இந்தியர். ஆனால், எவ்வித கூச்சமின்றி கலந்துகொண்டார். தான் மட்டும் அதைக் கற்றுக் கொள்ளக் கூடாது; நம்மவர்களில் பலரும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த வகுப்பு ஆசிரியர்களில் ஒருவரின் உதவியை நாடி அந்தப் பகுதியில் வசிக்கும் 10 பேர் இதைக் கற்றுக்கொள்ள வழிவகுத்தார். இது போன்ற பயிற்சி வகுப்புகள் அதிகமாக நடத் தப்படுகின்றன. ஆனால், நம் சமூகத்தைச் சார்ந்த பெண்கள்தான் கலந்துகொள்வதில்லை என்கிறார் லெட்சுமி. நாளிதழ் விற்பனையில் தொடங்கிய லெட்சுமி, இன்று இரு கடைகளுக்கு உரிமையாளராகி உள்ளார். இந்த வெற்றி சாதாரணமாக அவருக்குக் கிடைக் கவில்லை. தடைகள் பல அவரைத் தடுத்து நின்ற போதிலும் அவற்றைத் தகர்த்து எறிந்து, இன்று தனக்கென்று ஒரு தடத்தை அமைத்துள்ளார். இந்த வெற்றிக்கு அவருடைய கணவர் தனபாலனும் முக்கிய பங்காற்றி உள்ளார். எலெட்ரிக்கல் சூப்பர்வைசராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர், மனை வியின் வியாபாரத்திற்காக அதை விட்டு விட்டு அவருக்குப் பக்கப்பலமாகத் துணைநின்றார். தன்னுடைய நம்பிக்கை மற்றும் வியாபாரத்தின் முது கெலும்பு அத்தனையும் தன்னுடைய கணவர்தான் எனக் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி, தன்னுடைய வியாபார வளர்ச்சிக்கு மலேசிய நண்பன் ஒரு வகையில் உதவியுள்ளதாகவும் அவரின் மகன் கடந்த 2014ஆம் ஆண்டில் மலேசிய நண்பன் நடத்திய யூபிஎஸ்ஆர் மாணவர் அங்கீகரிப்பு நிகழ்வில் பரிசு பெற்றுள்ளதாகவும் சொல்லி மகிழ்ந்தார். நம்மவர்களின் பலகாரம் தொடர்ந்து நம்மிடையே இருக்க வேண்டும். அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதன் அடிப் படையில், கச்சான் பூத்தே வியாபார நுணுக்கங்களையும் பலகாரங்களைத் தயாரிக்கும் செயல்முறைகளையும் பிறருக்குக் கற்றுத்தரத் தயாராகவும் உள் ளார் லெட்சுமி.

பின்செல்

மகளிர்

img
சாதனைப் பெண் வைஷ்ணவிக்குப் பின்னால் இத்தனை துயரங்களா?

உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”

மேலும்
img
பெண்களே! உங்கள் முடிவு உங்கள் தலைவிதியை மாற்றும். : சாதனைப் பெண் ஜெயலதா

ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்

மேலும்
img
சிவராத்திரியை முன்னிட்டு,10,000 நடனக் கலைஞர்கள் ஒன்றாக பங்கேற்று கின்னஸ் சாதனை

உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த

மேலும்
img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img