புதுடெல்லி: இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் சிக்கியுள்ள ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரிடமும் விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் விரைவில் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வரவழைக்கப்படுவார் என அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் ஆதாயம் கிடைக்கக்கூடிய மற்றொரு பதவியில் இருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள அந்த அதிகாரி, இதை காரணம் காட்டி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் பரபரப்பு அடைந்துள்ளது. 21 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி வட்டாரங்கள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. 21 எம்எல்ஏக்களும் பார்லிமென்டரி செக்ரட்டரி எனப்படும் இணை அமைச்சர் அந்தஸ்து நியமிக்கப்பட்டதற்கு இரட்டை ஆதாய சட்டத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கான மசோதாவை டெல்லி சட்டசபை நிறைவேற்றியது. ஆனால் அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து இரட்டை ஆதாயம் பெற்ற குற்றத்திற்காக ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரும் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் நாடகமாடுவதாக குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் சட்டசபையில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்