பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நாளை கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மனியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், மானிய கோரிக்கைகள் பற்றியும் நாளை விவாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்