தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி குற்றப் பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்த பின்பு இன்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மே 15 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் டி.டி.வி. தினகரன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்