முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை எப்போது முடிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித் திருந்தது. இதையடுத்து அவர்கள் செய்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. சுமார் 17 வருடங்களாக தொடர்ந்து வரும் இவ்விசாரணையின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள பேரறிவாளன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,' இத்தனை வருடங்களாக நடைபெற்ற வரும் இவ்வழக்கு விசாரணை எப்போது முடிக் கப்படும்' என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 4 வாரங்களில் முறையான அறிக்கையை சமர்பிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. 'வெளிநாட்டில் உள்ள வர்களுக்கு இவ்வழக்கில் தொடர்பு உள்ளதால்தான் விசாரணை தாமதமாவதாக' சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசார ணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்