முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதனால், பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளரானார் சசிகலா. இவரை எதிர்த்து திடீரென போர்க்கொடி தூக்கினார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். அவரின் இந்த முடிவு அ.தி.மு.க.வையே அதிரவைத்தது. சசிகலாவின் தலைமையை பிடிக்காத கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். தொண்டர்களில் பலரும் பன்னீர்செல்வம் தலைமையை விரும்பினர். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக் கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் கோரி இருதரப்பு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க பெய ரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் பயன்படுத்த தடைவிதித்தது தேர்தல் ஆணையம். இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றும் நோக்கி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து தள்ளிவைப்பதாக பழனிசாமி அணியினர் திடீர் அறிவிப்பை வெளியிட்டனர். இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பன்னீர்செல்வம் அணியினர் விதித்துள்ள இரண்டு நிபந்தனையால் பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பன்னீர்செல்வம் திடீர் சுற்றுபயணத்தை மேற்கொள்கிறார். காஞ்சிபுரத்தில் தனது சுற்றுப்பயணத்தை துவங்கும் பன்னீர்செல்வம், இரு அணிகள் இணைப்பு குறித்தும், ஜெயலலிதா மரணம் குறித்தும் தாெண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிய திட்டமிட்டுள்ளார். மேலும், கட்சியை வளர்ப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்தித்து கருத்து கேட்க உள்ளார். ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்ய பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடந்தே தீரும் என்று அமைச்சர்கள் ஒருபக்கம் கூறிவருகின்றனர். ஆனால், பன்னீர்செல்வமோ ஒருமாத சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார். பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் முடிவு பழனிசாமி அணியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்