அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்துள்ளதால், தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இதற்கு பி.ஜே.பிதான் கார ணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இரு அணிகள் பிரிந்தது, தற்போது இணைவதற்கான பேச்சுவார்த்தை அனைத்துக் கும் பி.ஜே.பிதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அ.தி.மு.க அரசு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம். ஆனால், தற்போது தமிழகத்திற்கு பலமான முதலமைச்சர் வேண்டும். அ.தி.மு.க-வின் இரு அணிகளும் பிரிவதற்கும், மீண்டும் சேரவும் பி.ஜே.பி காரணமல்ல. கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். தமிழகத்தில் பி.ஜே.பி நேர்மையான முறையில் வளர்ந்து வருகிறது. இனிவரும் காலங்களில் தமிழகத் தில் பி.ஜே.பி ஆட்சி அமைக்கும். தி.மு.க குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சிக்கிறது" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்