காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க பங்கேற்றிருந்த பொழுது மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு குறித்து பேசாதது ஏன் என்று மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய இணைஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணியை நேற்று நேரில் சென்று பார்வை யிட்டார். இன்று டெல்லி திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. ஏதேனும் ஒரு இடத்தில் தமிழ் மொழியை அகற்றிவிட்டு இந்தி மொழி சேர்க்கப்பட்டு இருந்தால் அதற்கு மத்திய அரசு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேஸ்ட்டில் நடைபெற்ற கொலை சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரம். அதில் மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க பங்கேற்றிருந்த போது மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு குறித்து பேசாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்