சமூக நீதிக்காக போராடிய ராமானுஜரின் 1000-வது ஆண்டு விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நாளை அஞ்சல் தலை வெளி யிடப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுகிழமையில் 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று உரையில் அவர், 'வி.ஐ.பி கார்களில் இருந்து சிகப்பு சைரன் விளக்கு அகற்றப்பட்டது வெறும் அரசின் நடவடிக்கை. ஆனால் வி.ஐ.பி என்ற எண்ணத்தை மனதில் இருந்து அகற்ற அதிகப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கம். மாணவர்கள், சிறார்கள் இந்த விடுமுறை தினங்களில் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள், சிறார்கள் விடுமுறை நாள் களில் நீச்சல், விளையாட்டு உள்ளிட்டவற்றில் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும். குஜராத்தும், மஹாராஷ்டிராவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிது பங்காற்றி வருகின்றன. மே 5-ம் தேதி தெற்காசியாவிற்கான செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது ஆகும். இதன் மூலம் தெற்காசிய பிராந்தியத்தில் நல்ல உறவை ஏற்படுத்த முடியும். சமூக நீதிக்காக போரா டிய ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை அவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்