சிறந்த விண்கலம் வடிவமைப்பிற்காக இந்திய மாணவி ஒருவர் நாசாவின் சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்குபெற அழைக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் நடந்த நாசா போட்டியில் வென்றதற்காக இப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. பூனே நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தபஸ்வினி ஷர்மா நாசா நடத்திய சர்வதேச விண்கலம் வடிவமைக்கும் போட்டியில் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச அளவில் நடந்த இந்த விண்கலம் வடிவமைக்கும் போட்டியில் 6,000 போட்டியாளர்களை வென்று இப்பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் தபஸ்வினி ஷர்மா. அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் மாகாணத்தில் நடைபெறவிருக்கும் நாசாவின் 36-வது சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்க சிறப்பு பார்வையாளராக அழைக்கப்பட்டுள்ளார் தபஸ்வினி. ‘Kirithra Orbis’ எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கலம் தேன்கூடு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பே தனி நபர் விண்கல வடிவமைப்பாளர் பிரிவில் தபஸ்வினிக்கு விருதினை பெற்றுத்தந்துள்ளது. இதுகுறித்து அம்மாணவி கூறுகையில், ‘நாசாவின் இணையதள பக்கத்தை எதார்த்தமாகப் பார்த்தபோது இப்போட்டி குறித்து அறிந்துகொண்டேன். பள்ளியின் ஒத்துழைப்பாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் உலக அளவில் நடந்த இப்போட்டியில் முதல் பரிசு வெல்லமுடிந்தது’ என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்