img
img

சகித்துக்கொள்ளவே முடியாத அநீதி!
சனி 29 ஏப்ரல் 2017 17:27:00

img

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளை, உடல்நலக் கோளாறு மற்றும் குடும்பப் பிரச்னை காரணமாக இறந்துள்ளதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசுக்கு, சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பருவ மழை பொய்த்து, வறட்சியால் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், விவசாயிகள் குடும்பப் பிரச்னை, உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள் ளதாகக் குறிப்பிடப்பட்டது. தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,' ஜெயலலிதா சிறைசென்றபோதும் மரணமடைந்தபோதும் அவருக்காக இறந்தவர்களின் குடும்பத்தைத் தேடிப்போய் நிவா ரணம் அளித்த அ.தி.மு.க அரசு, விவசாய மரணத்துக்கு நிவாரணம் தர மறுப்பது சகித்துக்கொள்ளவே முடியாத பெரும் அநீதியாகும். எனவே, வறட் சியினால் விவசாயிகள் இறக்கவில்லை எனத் தமிழக அரசு தாக்கல்செய்திருக்கும் பிரமாணப்பத்திரத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, இறந்துபோன விவசாயிகளைப் பற்றிய உண்மைநிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img