இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தின கரன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லி போலீஸார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, பெங்களுரு, கொச்சி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசா ரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புவரை, தினகரனுக்கு ஆதரவாக இருந்து அமைச்சர்கள், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும் பாலானோர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுசேர்ந்துள்ளனர். சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தினகரனைப் பார்க்க, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வரவில்லை. கட்சியின் செய் தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சிலரே தினகரனைச் சந்திக்க வந்தனர். எனினும் காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, தினகரனை தாங்கள் பார்த்ததாக நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார், மேலும் தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் 87 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதும், தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவ ருக்கு ஆதரவு தெரிவித்த 12 எம்.எல்.ஏக்களைத் தவிர்த்து 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அரசு வெற்றிபெற்றது. பிப்ரவரி மாதம் இந்த நம் பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டு மாதத்திற்குள் ஆட்சியிலும், அ.தி.மு.க கட்சியிலும் எண்ணற்ற நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. தினகரனை கட்சியில் இருந்து ஓரங்கட்டிய அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தற்போது ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தினகரனை 87 எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளதால், மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், சட்டசபையைக் கூட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார். சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்த நிலையில், ஓ.பி.எஸ் தனி அணி யாகப் பிரிந்து போது, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை தங்க வைத்து, பெரும்பான்மையை நிரூபித்ததைப் போன்று இப்போது காட்சிகளை அரங் கேற்ற முடியாது. தினகரனுக்கு ஒருசில அமைச்சர்கள், ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படும் சூழ்நிலையில், 87 எம். எல். ஏக்களின் ஆதரவு இருப்பதாக சம்பத் கூறியிருப்பது, எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள 25 பேர் தனியாக சென்னையில் கலந்தாலோசனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச் சரவையில் தங்களுக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவில் அளிக்கப்படவில்லை என்று அந்த எம்.எல்.ஏக்களின் குற்றச்சாட்டு என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க-வின் இரு அணிகளின் இணைப்பைப் பொறுத்தவரை நாளொரு நிபந்தனை, பொழுதொரு தலைவர்களின் பேட்டி என்ற ரீதியில் சென்று கொண் டிருக்கிறது. இரு தரப்பினருமே "பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்" என்று தெரிவித்துள்ள போதிலும், இதுவரை இரு அணியின் குழுக்களும் சந்திக்க வில்லை. ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதாக என்பதை மீண்டும் நிரூபிக்க ஒருவேளை ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிடுவாரேயானால், நிலைமை என்னவாகும் என்று கணிக்க முடியாத நிலையில்தான் எடப்பாடி தலைமையிலான அரசு, 'நித்யகண்டம் பூரண ஆயுள்' என்ற பழமொழிக்கேற்ப ஆட்டம் கண்டுள்ளது. அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்ந்து தாமதமாகிச் சென்று கொண்டேயிருக்குமானால், ஆட்சியைக் கலைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழி யிருக்காது. அதற்கு முன்னதாக, தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவின் பங்கு, குறிப்பிடத்தக்கதாக இருக்கும். முதலில் ஆளுநரிடம் அறிக்கை கோரப்படும். ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் பரிந்துரை செய்யும்பட்சத்தில், தமிழக அரசு கலைக்கப்படும். அநேகமாக ஒரு சில மாதங்கள் வரை இதே குழப்பத்தில் அரசை செயல்பட விட்டு, பின்னர் கலைப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. எனவே, எப்படி இருப்பினும் தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்