மறைந்த நடிகர் வினுசக்ரவர்த்தியின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த வினுசக்ரவர்த்தி, உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் சாலி கிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வினுசக்ரவர்த்தி உடலுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வினுசக்ரவர்த்தியின் இறுதி சடங்குகள் மாலையில் நடைபெறுகின்றன. மாலை 6 மணியளவில் போரூர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய் யப்படுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945-ம் ஆண்டு பிறந்த வினுசக்ரவர்த்தி வண்டி சக்கரம், ரோசா பூ ரவிக்கைகாரி படங்களுக்கு திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கதாசிரியராக அறிமுகமான அவர் பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்