அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ‘இன்னமும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக முன்னிறுத்துகின்றனர் பழனிசாமி அணியினர். இணைவது போலக் காட்டிவிட்டு, தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள்' என் கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிகாரப்பூர்வமாக மூன்று அணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தொலைக் காட்சி விவாதங்களில் இந்த மூன்று அணிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். "சசிகலாவை முழுமையாக நீக்கிவிட்டு வந்தால்தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு உறுதியாகக் கூறிவிட்டோம். அப்படியொரு முடிவிலேயே பழனிசாமி அணியினர் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. நேற்று தலைமைக் கழகத்தில் மூன்றாவது நாளாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இந் தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத் தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆதாரங்களை மே 5-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தினர். அந்த பிரமாண பத்திரங்களில், பொதுச் செயலாளராக சசிகலாவையும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனையும் குறிப்பிட்டுள்ளனர். 'பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்' எனக் கூறிக் கொண்டே, மறுபுறம் உள்ளடி வேலைகளைச் செய்து வருகின்றனர் எடபபாடி பழனிசாமி தரப்பினர். அப்படியானால், அணிகள் இணைவதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றே தோன்றுகிறது" என ஆதங்கத்தோடு பேசினார் பன்னீர்செல்வம் அணியின் மூத்த நிர்வாகி ஒருவர். இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, “இரண்டு தரப்பினரும் சுமூகமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைமைக் கழகத்தில் இருந்து பேனர்களை அப்புறப்படுத்தினோம். தினகரனும் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டார். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு சசிகலா கட்சி அலுவலகத்துக்கு வரும் வாய்ப்பே இல்லை. அப்படியிருக்கும்போது, ‘நிபந்தனைகளை ஏற்கும் வரையில் பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியம் இல்லை’ என்கிறார் மா.ஃபா.பாண்டியராஜன். அவர் களது நிபந்தனை என்பது, ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதாக வெளியில் சொல்லப்படுகிறது. உண்மையில், ‘பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். அமைச்சரவையில் நாங்கள் சொல்பவருக்கு வலுவான துறை ஒதுக்க வேண்டும்’ என நிர்பந்தம் செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது, ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் முப்பதாயிரம் நிர்வாகிகளிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு வந்தன. பன்னீர்செல்வம் அணியினரும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். எங்கள் பக்கம் உள்ள ஆவணங்களை நாங்கள் கொடுக்கிறோம். இதற்கும் பேச்சு வார்த்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என விவரித்தவர்கள், “இரண்டு தரப்பும் அமர்ந்து பேச வேண்டிய நேரத்தில், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் சில வேண்டுகோள்களை வைக்கின்றனர். இணைப்பு முயற்சிக்கு ஜெயா டி.வி நிர்வாகிகள் இருப்பதால், விவேக்கை அங்கிருந்து அகற்றுமாறு வைத்திலிங்கத்திடம் கோரிக்கை வைத்தார் பன்னீர் செல்வம். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார் வைத்தி. அவருக்குப் பதில் அளித்தவர், ‘இதுநாள் வரையில் விவேக்கிடம் நான் பேசியதுகூட இல்லை. நீங்கள் விலகுங்கள் என அவரிடம் பேசவும் முடியாது. நீங்கள் யாராவது பேசுங்கள்' எனக் கூறிவிட்டார். இந்தத் தகவல் பன்னீர்செல்வத்துக்குப் போக, கொந்தளித்து தீர்த்துவிட்டார். இதன் எதிரொலியாக, 'தன்னை நோக்கி ரெய்டு நடவடிக்கைகள் பாயும்' என்பதை அறிந்து மன நெருக்கடியில் இருக் கிறார் விவேக். இரண்டு தரப்பிலும், பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத வரையில் டெல்லி போலீஸாரால் தினகரன் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்" என்றார் விரிவாக. “எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக திரைமறைவில் பல காரியங்கள் நடந்து வருகின்றன. நேற்று எம்.எல்.ஏக்களில் 27 பேர் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச் செல்வன் தலைமையில் தனிக் கூட்டம் போட்டதாக செய்தி வெளியானது. இந்தச் செய்தியை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்தார். அதே நேரம், டெல்லிக்கு சென்று வந்ததில் இருந்தே கலக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி மற்றும் கட்சி தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்கள் வருவதால், ' நான் ஊருக்கே போய்விடுகிறேன். எனக்கு அமைச்சரவையில் இடமே வேண்டாம். நிம்மதியாக ஒதுங்கிவிடுகிறேன்' என நொந்து போய் கூறிவிட்டார். அவரைக் கொங்கு மண்டல அமைச்சர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு பதவி உறுதியாகும் வரையில், பேச்சு வார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்