கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளைக் காரணம் காட்டி குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகை குஷ்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலின்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் எனது பாஸ்போர்ட் புதுப்பித்துத்தர மறுக்கப்பட்டது' என்றார் இதையடுத்து, வெளிநாடு செல்லும்போது, அது குறித்த முழு விவரங்களையும் மதுரை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. இந்நிலையில், தற்போது குடும்பத்துடன் வெளிநாடு செல்ல உள்ளதாகக் கூறி, அதற்காக நீதிமன்றத்திடம் குஷ்பு அனுமதி கேட்டிருந்தார். இதில், குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்