தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சி யின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கடந்த 2009ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 8 வருடங்களுக்கு மேலாகியும் முடித்து வைக்கப்படாததால், வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, பிணையை மறுத்துச் சிறைச்சென்றார் வைகோ. 20 நாள்களுக்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் வைகோவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சீமான். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் வாழ்வாதாரத் தினையும், நிலவளத்தினையும் நிர்மூலமாக்கும் திட்டங்கள் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலை வராக, அனுபவங்கள் பல பெற்ற வைகோ இத்தகைய சூழலில் சிறைப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவர் விரைவில் சிறைமீண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் தருணத்தை எதிர்நோக்குகிறோம். எனவே, வைகோ மீது தொடரப்பட்ட இப்போலியான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். வைகோ விடுதலைபெற்று தனது அரசியல், சமூகப் பங்களிப்பை செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்