டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக டி.டி.வி. தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரனிடம் டெல்லி காவல்துறையினர் நான்கு நாள்களாக விசாரணை செய்தனர். நான்கு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார் என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்திரி, டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரு வாரம் வரை போலீஸ் காவலில் விசாரணை தொடரும் என்று தெரிகிறது. சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்